பணம், புகழுக்கு எப்போதுமே ஆசைப்பட்டதில்லை – ஸ்ருதிஹாசன்

shruthi hassan 2_00005மிழில், தற்போது ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை என்றாலும், தெலுங்கிலும், ஹிந்தியிலும் மிகவும் பிஸியாக இருக்கிறார் ஸ்ருதிஹாசன்.

சமீபத்திய பத்திரிகை பேட்டி ஒன்றில் பணம், புகழுக்கு எப்போதுமே ஆசைப்பட்டதில்லை என கூறியிருக்கிறார்.

மேலும், அவர் கூறியதாவது…

“நான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும், எனக்குள் இருக்கும் நடிகையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறேன். வேலையில் நாம் காட்டும் முழு ஈடுபாடு, நம்மை இன்னும் முன்னோக்கி எடுத்துச் செல்லும்.

என்னுடைய நடிப்புக்கு யாருமே இன்ஸ்பிரேஷன் கிடையாது. அப்படி ஏதாவது வைத்துக் கொண்டு நடித்தால் நமது தனித்தன்மை போய்விடும். அந்த தவறை நான் எப்போதும் செய்ய மாட்டேன். அதனால்தான் என்னுடைய நடிப்பு யதார்த்தமாக இருக்கிறது,” என்று கூறியுள்ளார்.

Read Previous

‘ராஜா ராணி’ இயக்குனரை வாழ்த்திய ரஜினிகாந்த்

Read Next

‘மத கஜ ராஜா’ படத்தை வாங்கிய விஷால்…