என்னைப் பற்றி தவறான தகவல் – அஞ்சலி

anjali 3007_00011“யாரையோ திருமணம் செய்து கொண்டு விட்டதாகவும், ‘மத கஜ ராஜா’ படத்திற்கு தெலுங்கு டப்பிங் பேச கிடைக்காததாகவும் வந்த செய்திகளை மறுக்கிறார் அஞ்சலி…”

இது தொடர்பாக அவரது மக்கள் தொடர்பாளர் மூலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அஞ்சலி கூறியிருப்பதாவது,

“கற்றது தமிழ்’ படம் துவங்கி இன்று வரை பல்வேறு கால கட்டங்களில் என்னை ஆதரித்து, ஊக்கமளித்த அனைத்து ஊடகங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

சமீபத்தில், நான் சுந்தர். சி இயக்கத்தில் விஷாலுடன் நடித்த ‘மத கஜ ராஜா’ படத்திற்கு டப்பிங் பேச மறுப்பதாகவும், படம் சம்பந்தமான விளம்பர நிகழ்ச்சிகளுக்கு  வர மறுப்பதாகவும் செய்திகளும், அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருடன் இணைத்து செய்திகள் வந்தவண்ணம் உள்ளது.

அது முற்றிலும் தவறான தகவல் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

இனிவரும் காலங்களில் என்னைப் பற்றிய செய்திகளுக்கு விளக்கம் தேவைப்படும் எனில் என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்,” என அஞ்சலி அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

Read Previous

இன்றைய ரிலீஸ்…

Read Next

‘பண்ணையாரும் பத்மினியும்’ இசை வெளியீடு விரைவில்…