‘முன் தினம் பார்த்தேனே’, ‘தடையறத் தாக்க’ ஆகிய படங்களை இயக்கிய மகிழ்திருமேனி இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் புதிய படம் ஒன்றை நேமிசந்த் ஜபக் வழங்க வி.ஹித்தேஷ் ஜபக் தயாரிக்கிறார்.
இப்படத்தில் முன்னணி நடிகை ஒருவர் கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார். மற்ற நடிக, நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது.
முற்றிலும் மாறுபட்ட, வித்தியாசமான ஆக்ஷன் திரில்லராக இப்படம் உருவாக இருக்கிறது.
நவம்பர் மாதம் சென்னையில் படப்பிடிப்பு துவங்கி தொடர்ந்து ஸ்பெயின், இத்தாலி, லண்டன், கோவா, மும்பை ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது.
இப்படத்தைத் தொடர்ந்து ஜெய்கிருஷ்ணா இயக்கத்தில் விஜய் சேதுபதி , கிருஷ்ணா இணைந்து நடிக்கும் ‘வன்மம்’ படத்தையும் இந்நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.
பாலபாரணி ஒளிப்பதிவில், என்.ஆர். ரகுநந்தன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ள இப்படத்தின் கதாநாயகி மற்ற நட்சத்திரத் தேர்வு நடைபெற்று வருகிறது.