என் படத்தைப் பார்த்து நாடே பெருமைப்படும் – இயக்குனர் விஜய மனோஜ்குமார்

uyirukku uyiraga press meet_00018சிவாஜிகணேசன் நடித்த ‘மண்ணுக்குள் வைரம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் மனோஜ்குமார்.

தொடர்ந்து பல படங்களை இயக்கியவர் சில வருட இடைவெளிக்குப் பிறகு , விஜய மனோஜ்குமார் என பெயரை மாற்றிக் கொண்டு, ‘உயிரோடு உயிராக’ என்ற படத்தை அவருடைய 25வது படமாக இயக்கி முடித்திருக்கிறார்.

விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது,

தங்கள் குழந்தைகளுக்குக் கல்வியும் நல்ல வாழ்க்கையும் அமைத்துக் கொடுக்கும் பெற்றோர்களே, தங்களது குழந்தைகள்  படிக்கும் காலத்தில் காதல் வயப்பட்டுத் தடம்மாறும் வேளைகளில் ஆறுதலாக இருந்து அவர்களை நல்வழிப்படுத்தவேண்டும்… இந்தப் படத்தில் அப்படி ஒரு பொறுப்பான தந்தையாக பிரபு நடித்திருக்கிறார்…

படத்தில் காதல், நகைச்சுவை மற்றும் குடும்பப்பின்னணியுடன் கிளைமாக்ஸில் புதிதாக ஒன்றைச் சொல்லியிருக்கிறேன்…  நமது மாணவர்களின் மூளை எவ்வளவு மகத்தானது என்று சொல்லும் விதமாக அது இருக்கும்… இந்தப் படத்தில் ஒரு ஹீரோ ஏரோநாட்டிகல் இன் ஜினியர்.

இன்னொரு ஹீரோ கம்ப்யூட்டர் இன்ஜினியர்… எதிர்காலத்தில் போர்கள் தரையில் நடைபெறப்போவதில்லை… அவை வான்வெளியில் தான் நடைபெறும்… அப்படிப்பட்ட அபாயகரமான போர்களின் போது நமது இராணுவத்திற்குப் பெரிதும் பயன்படும் தீர்வினை இந்த  மாணவர்கள் கண்டுபிடிப்பார்கள்…

படம் வந்தபிறகு நிச்சயம் அந்த விஷயம் உங்களை பிரமிக்க வைக்கும்… என்  வயது என்ன என்று எல்லோரும் கேட்பார்கள்.. அந்த அளவிற்கு இளமையாகவும் புதுமையாகவும் கிளைமாக்ஸினை அமைத்திருக்கிறேன்… இந்த நகரமே, இந்த மாநிலமே ஏன் ஒட்டுமொத்த இந்தியாவே பெருமைப்படும் அளவிற்கு அது இருக்கும்…” என்றார் இயக்குனர் விஜயகுமார்.

 

 

Read Previous

புதைகுழியில் சிக்கிய ஜோடி…

Read Next

அஜித் நடிக்கும் ‘ஆரம்பம்’ தீபாவளி ரிலீஸ்….