இன்று அக்டோபர் 11, 2013 வெளியாகும் படங்களைப் பற்றிய சிறு விவரம்…
நய்யாண்டி
5 ஸ்டார் பிலிம்ஸ் – கதிரேசன் தயாரிப்பில் சற்குணம் இயக்கத்தில் ஜிப்ரான் இசையமைத்திருக்கும் படம். தனுஷ், நஸ்ரியா, சூரி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
தொடர்ச்சியாக தோல்விப் படங்களில் நடித்த தனுஷ், இந்த படம் வெற்றிப் படமாக அமையும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார். நஸ்ரியாவின் ‘தொப்புள்’ சர்ச்சையால் படத்திற்கும் சரியான விளம்பரம் கிடைத்திருக்கிறது.
வணக்கம் சென்னை
ரெட் ஜெயன்ட் மூவீஸ் – உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் அனிருத் இசையமைத்திருக்கும் படம். சிவா, ப்ரியா ஆனந்த், சந்தானம் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
சிவாவிற்கும் சமீபத்தில் வெளியான எந்த படமும் கை கொடுக்கவில்லை. இந்த படமாவது வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் அவர் இருக்கிறார். கிருத்திகா உதயநிதி , தமிழ் சினிமாவிற்கு கிடைத்த புதிய பெண் இயக்குனர்.
கயவன்
ஸ்கை நெட் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெங்கிநிலா இயக்கத்தில் ஜெரோம் முருகன் இசையமைத்திருக்கும் படம். மிதுன், நைசா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.


