ஆமாம்…நான் காதலிக்கிறேன்… – சமந்தா

samantha-1510-newsநடிகை சமந்தா, தான் ஒருவரை காதலித்து வருவதாகக் கூறியுள்ளார்.

‘ராமய்யா ஒஸ்தாவய்யா’ என்ற தெலுங்குப் படம் கடந்த வாரம் வெளியானதை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தார் சமந்தா.

அப்போது பத்திரிகையாளர்கள் சமந்தாவின் காதல் பற்றி கேட்ட போது அதற்கு சமந்தா பதிலளித்தார்.

“என்னுடைய காதல் பற்றி பரவி வரும்  செய்திகள் உண்மைதான். நான் அவரை தீவிரமாகக் காதலித்து வருகிறேன். ஆனால், எனது திருமணம் தற்போது நடக்காது, அதற்கு இன்னும் நிறைய காலம் உள்ளது, ” என்று பதிலளித்துள்ளார்.

சமந்தா, நடிகர் சித்தார்த்தை காதலிப்பதாகத்தான் செய்திகள் பல மாதங்களாக மீடியாக்களில் வெளிவந்து கொண்டிருக்கிறது.

ஆனால், பேட்டியில் சமந்தா , தான் யாரைக் காதலிக்கிறேன் என்பதைச் சொல்லவில்லை…

Read Previous

கொஞ்சம் ரெஸ்ட் எடும்மா…ஸ்ருதிக்கு அம்மா அட்வைஸ்…

Read Next

சந்தானம் நடிக்கும் ‘வாலிப ராஜா’