கௌதம் விவகாரம் : சூர்யாவுக்குப் பிடிக்காதது…விக்ரமுக்கு பிடித்தது…

vikram-and-surya‘துருவ நட்சத்திரம்’ படத்திலிருந்து சூர்யா விலகி விட்டாலும், அவர் ஏன் விலகினார் என்பது பல துருவங்களில் விசாரிக்கப்படும் செய்தியாகி விட்டது.

ஒரு துருவத்திலிருந்து நமக்கு வந்த செய்தி இதுதான்…

கௌதம் சூர்யாவிற்கு நிறையவே கதைகளைச் சொன்னாராம். ஆனால், ஒரு கதை கூட சூர்யாவிற்குப் பிடிக்கவில்லையாம்.

சூர்யாவுக்கும் இரண்டு சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த, தன் கதையை இப்போது சூர்யா பிடிக்கவில்லை என்று சொல்கிறாரே என்று அதிர்ச்சியடைந்திருக்கிறார் கௌதம்.

இருந்தாலும் இவர்களது சந்திப்பு தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கிறது.

ஒரு சந்தர்ப்பத்தில், “உங்களுக்குச் சொன்ன கதைகளைத்தான் விக்ரமுக்கு சொன்னேன், அவர் நடிக்க சம்மதித்தார். ஆந்திராவில் சிரஞ்சீவி மகன் ராம் சரணுக்குச் சொன்னேன், அவரும் சரியென்று சொன்னார்.

அடுத்த ஆண்டு அவர்கள் என்னுடைய இயக்கத்தில் நடிக்கப் போகிறார்கள்,” என்று கௌதம் சொன்னதுதான் பிரச்சனையின் ஆரம்பமாகியிருக்கிறது.

அப்படியென்றால் எனக்குக் கதை கேட்கத் தெரியவில்லையா என சூர்யா கோபமாகியதாகவும் அதன் வெளிப்பாடுதான் அவர் தந்த அறிக்கை என்றும் கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள்.

கௌதம் வேறு யார் பெயரையாவது சொல்லியிருந்தால் கூட சூர்யா பின்னராவது நடித்துக் கொடுத்திருப்பார். விக்ரம், பெயரை சொன்னதுதான் சூர்யாவை அறிக்கை வரை கொண்டு சென்றிருக்கிறது.

‘பிதா மகன்’ படத்திலிருந்தே விக்ரமும், சூர்யாவும் பிரிந்தேயிருப்பது தெரிந்த ஒன்றுதானே…

Read Previous

அஜித்தின் கடமை உணர்ச்சி – எழுத்தாளர்கள் சுபா…

Read Next

‘ரெட் டிராகன்’ காமிராவில் சூர்யா – லிங்குசாமி படம்….