‘காதல் இளவசரன் ’ – ‘உலக நாயகன்’ ஆனது எப்படி…?

kamalhassan-universal-hero80, 90களில் ‘காதல் இளவரசன்’  என்றே அனைத்து ரசிகர்களாலும் கமல்ஹாசன் அழைக்கப்பட்டு வந்தார்.

ஆனால், கடந்த சில வருடங்களாக ‘உலக நாயகன்’ என்று அழைக்கப்பட்டு வருகிறார்.

அவருக்கு யார் அந்த பட்டத்தை சூட்டினார்கள், எதனால் அப்படி அழைக்கப்டுகிறார் என்பதன் காரணம், இன்று விஜய் டிவியில் மறுஒளிபரப்பான ‘கமல் 50’ பார்க்கும் போதுதான் தெரிந்தது. 2009ல் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியை இன்றுதான் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது.

அதில் நமக்கு கிடைத்த ஒரு தகவல், கொஞ்சம் பழைய தகவல்தான் என்றாலும் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளட்டுமே…

இயக்குனர் கே.எஸ். ரவிகுமார்தான் கமல்ஹாசனுக்கு ‘உலக நாயகன்’ – ‘UNIVERSAL HERO’ என பட்டத்தைக் கொடுத்திருக்கிறார்.

அது பற்றி கே.எஸ். ரவிகுமார் பேசும் போது, “கமல் அவர்களை வைத்து “அவ்வை சண்முகி, தெனாலி, பஞ்ச தந்திரம், தசாவதாரம்’’ ஆகிய படங்களை இயக்கினேன். ‘தசாவதாரம்’ படம் முடிந்ததும், அந்த படத்திற்காக கமல் அவர்களின் பெயரைப் போடும் போது ‘காதல் இளவரசன்’ என்றெல்லாம் போட விரும்பாமல், ‘உலக நாயகன்’ என போட வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

அதை கமலிடம் சொன்னபோது, அவருக்கு அதில் விருப்பமில்லை. ஏற்கெனவே என்னை என்னவெல்லாமோ சொல்லி அழைக்கிறார்கள், அதெல்லாம் வேண்டாம் என்றார்.

ஆனால், நான்தான் விடாமல் இல்லை ஸார் நான் அப்படித்தான் போடப் போகிறேன் என்று விடாப்பிடியாக ‘உலக நாயகன்’ என்று படத்தின் டைட்டிலில் போட்டேன். அந்த பெயர் அனைவராலும் விரும்பப்பட்டு அப்படியே அழைக்கப்பட்டு வருகிறது, ” என்றார்.

பொருத்தமான பெயர்தான். தமிழ் சினிமாவை, உலக அளவில் கொண்டு செல்லக் காரணமானவருக்கு இதை விட பொருத்தமான பட்டம் வேறு என்ன வைப்பது.

Read Previous

14ம் தேதி முதல் ‘ராவண தேசம்’

Read Next

‘கஞ்சா வச்ச கண்ணு…’ இப்படி எழுதுவது சரியா…?