தமிழ் சினிமாவில் கதைக்குக் கூட பஞ்சம் வராது. ஏன்..படத்துல கதைன்னு ஏதாவது இருக்கான்னு நீங்க கேக்கறது காதுல விழுது.
ஆனால், படத்துக்கு தலைப்பு வைக்கிறதுல இருக்கிற பஞ்சம் இருக்கே. அப்பப்பா….எப்படியாவது வித்தியாசமாக டைட்டில் வச்சி அசத்தணும்னுதான் எல்லாருமே நினைக்கிறாங்க.
அதே சமயம், நம்மையும் நல்லா குழப்பி விட்டுடறாங்க…
போன வாரம், ஒரே மாதிரியான கொஞ்சம் குழம்ப வைக்கிற இரண்டு பங்களோட தலைப்புதான் செய்தியா வந்தது.
அதாவது, “இருக்கு ஆனா இல்ல, இல்ல ஆனாலும் இருக்கு”-ன்னு இரண்டு படங்கள் நம்மை குழப்பியடிச்சதுன்னா..இதே மாதிரி இன்னும் நாலு படங்களோட தலைப்புகள் இந்த லிஸ்ட்டுல புதுசா சேர்ந்திருக்கு.
செல்வராகவன் இயக்கத்துல ஆர்யா, அனுஷ்கா நடிச்சி 22ம் தேதி வெளி வரப் போற படம் “இரண்டாம் உலகம்’. ஆனால், “இருண்ட உலகம்’னு ஒரு படத்துக்கு பேர் வச்சிருக்காங்க. இது “தோர் 2’ என்ற ஆங்கிலப் படத்தோட தமிழ் டப்பிங் டைட்டில்.
இன்னொரு படம், “என்னமோ நடக்குது”. விஜய் வசந்த் நடிக்கிற படம். ஆனால் தனுஸ்ரீ தத்தா மிரளும் “அந்த வீட்ல என்னமோ நடக்குது’-ன்னு ஒரு படத்தோட விளம்பரம் இப்ப வந்திட்டிருக்கு. இதுல என்ன காமெடின்னா 20 வருஷம் முன்னாடியே ராம் கோபால் வர்மா இயக்கத்துல வெங்கடேஷ், ஸ்ரீதேவி நடிச்சி ‘என்னமோ நடக்குது’-ன்னு ஒரு தெலுங்கு டப்பிங் படம் வந்திருக்கு.
ஒரு தலைப்பு வைக்க என்னமா யோசிக்கிறாங்க.
இப்படி குழம்பின குட்டையில மீன் பிடிக்க எத்தனை பேர் காத்திருக்காங்களோ தெரியலையே…