தனியாகக் களம் காணும் ‘மிஸ்டர் சந்திரமௌலி’

போப்டா, கிரியேட்டிவ் என்டர்டெயினர்ஸ் தயாரிப்பில் திரு இயக்கத்தில் சாம் சிஎஸ் இயக்கத்தில் கௌதம் கார்த்திக், கார்த்திக், ரெஜினா, வரலட்சுமி, சதீஷ் மற்றும் பலர் நடித்துள்ள ‘மிஸ்டர் சந்திரமௌலி’ படம் நாளை மறுநாள் ஜுலை 6ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

80களின் நவரச நாயகன் கார்த்திக், அவரது மகன் கௌதம் கார்த்திக் இருவரும் முதல் முறையாக இணைந்து நடிக்கும் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஜுலை 6ம் தேதி வேறு எந்த பெரிய படங்களும் வெளிவராததால் ‘மிஸ்டர் சந்திரமௌலி’ படம் தனியாக களத்தில் இறங்குகிறது.

குடும்பப் பின்னணியில் ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் இடைவேளைக்குப் பிறகு எதிர்பாராத பல திருப்பங்கள் உள்ளதாம்.

படத்தில் ரெஜினாவின் கிளாமர் இளம் ரசிகர்களை அதிகம் கவரும் என்பதில் சந்தேகமில்லை. வரலட்சுமி ஒரு சஸ்பென்ஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நகைச்சுவைக்கு சதீஷ், வில்லத்தனத்திற்கு மகேந்திரன், சந்தோஷ் பிரதாப்.

இப்படத்தின் இயக்குனர் திரு-வின் மாமனாரும், அஜித் நடித்த ‘காதல் கோட்டை’ இயக்குனர் அகத்தியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சாம் சிஎஸ் இசையில் ‘ஏதேதோ ஆனேனே..’ பாடல் ஏற்கெனவே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னணி இசையிலும் அசத்தியிருக்கிறாராம் சாம்.

‘மிஸ்டர் சந்திரமௌலி’ இந்த வார வெளியீட்டில் மிரட்டும் படமாக இருக்கும் என்ற நம்பிக்கை படக்குழுவினரிடம் அதிகமாகவே உள்ளது.

Read Previous

மிஸ்டர் சந்திரமௌலி – ராஜாதி ராஜா – பாடல் வீடியோ

Read Next

‘பிக் பாஸ் 2’ முதல் வார ரேட்டிங் என்ன ?