சிம்பு ஜோடி – நயன்தாரா சம்பளம் 2 கோடி ?

nayanthara_00008சிம்பு ஜோடியாக நயன்தாரா நடிக்க எப்போது சம்மதித்தாரோ அப்போதிருந்தே புதுப் புது தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.

அவற்றில் எந்த அளவுக்கு உண்மை என்பது அவர்களாகவே சொன்னால்தான் உண்டு. அது இப்போதைக்கு நடக்கவும் போவதில்லை.

சிம்புவுடன் ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க இயக்குனர் பாண்டிராஜ்தான் பேசி சம்மதிக்க வைத்துள்ளார். படத்தில் இருவருக்கும் தொட்டுப் பேசும் காட்சிகள் கூட இல்லையாம், அதனால்தான் நயன்தாரா நடிக்க சம்மதித்தார் என்கிறார்கள்.

அது போக, சிம்புவுடன் நடிக்க சில கட்டுப்பாடுகளையும் நயன்தாரா விதித்துள்ளார். அதாவது, நடிக்கும் போது தன் கேரவன் பக்கம் வரவே கூடாது என்றும், தான் மட்டுமே நடிக்கும் காட்சிகளில் தேவையில்லாமல் வரக் கூடாது என்றும் சொல்லியிருக்கிறாராம்.

இதையெல்லாம் விட ஹைலைட், நயன்தாராவுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சம்பளம்தானாம். உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடிக்கும் படத்திற்கு  ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ள நயன்தாரா, சிம்பு படத்திற்காக இரண்டு கோடி ரூபாய் சம்பளம் பேசியிருக்கிறாராம்.

எவ்வளவு இருந்தால் என்ன இப்பவே அதை விட பத்து மடங்கிற்கும் மேல் பணம் கொடுத்து படத்தை வாங்க பலர் போட்டி போடுகிறார்களாமே…

Read Previous

சரத்குமார் – இனியா நடிக்கும் ‘வேளச்சேரி’

Read Next

ஊடகங்களை எதிர்க்கும் வைரமுத்து பேச்சு…சரியா…