சிம்பு ஜோடியாக பல்லவி…

pallavi_00004சிம்பு நடிக்கும் இரண்டு புதிய படங்களின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் ஆரம்பமாகி பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

ஒரு படம் பாண்டிராஜ் இயக்கும் படம், மற்றொன்று கௌதம் மேனன் இயக்கும் படம்.

பாண்டிராஜ் இயக்கும் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நீண்ட இடைவெளிக்குப் பின் நயன்தாரா நடிக்கிறார்.

கௌதம் மேனன் படத்திற்கு யார் என்பது சஸ்பென்சாகவே இருந்தது. ஆனால், இன்று சிம்புவின் ஜோடி யார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

பல்லவி என்ற புதுமுக நடிகையை சிம்புவுக்கு ஜோடியாக அறிமுகப்படுத்துகிறார் கௌதம் மேனன்.

பொதுவாகவே கௌதம் மேனன் படத்தில் நடிக்கும் ஹீரோயின்களுக்கு நல்ல பெயரும், புகழும் கிடைத்து விடும்.

அது பல்லவிக்கும் கிடைக்க வாழ்த்துகள்…

Read Previous

மீண்டு(ம்) வருகிறார் ராமராஜன்…

Read Next

பிரியாணி – ‘பிளேபாய்‘ ஆக நடித்துள்ள கார்த்தி