சூர்யாவுடன் நடந்தது என்ன ? – கௌதம் மேனன் விளக்கம்

surya-gautham-menon‘துருவ நட்சத்திரம்’ படத்தில் பூஜையெல்லாம் போட்டு நட்சத்திரங்களையெல்லாம் ஃபிக்ஸ் செய்து விட்டு, திடீரென கைவிட்ட கதை நம் அனைவருக்கும் தெரிந்ததுதான்.

அதன் பின் சூர்யாவின் அறிக்கை வந்தும், கௌதம் மேனன், மௌன மேனன் ஆகவே இருந்தார். சமீபத்திய பத்திரிகை பேட்டி ஒன்றில் சூர்யாவுடன் நடந்தது என்ன என்பதை விவரித்திருக்கிறார் அவர்.

“சூர்யாவுக்கு முதல்ல ஒரு கதை சொன்னேன். ஆனால், அது சூர்யாவுக்கு பிடிக்கலை. அப்புறமா ‘என்னை நோக்கிப் பாயும் தோட்டா’னு வேற ஒரு கதை சொன்னேன். அதையும் வேண்டாம்னு சொல்லிட்டாரு.

அப்புறமா ‘துருவ நட்சத்திரம்’தான் அடுத்ததுன்னு முடிவு பண்ணன். சூர்யாவும் ஓகே சொன்னார். ரஹ்மான் மியூசிக், த்ரிஷா ஹீரோயின், பார்த்திபன், அருண் விஜய்- னு எல்லாரையும் பிக்ஸ் பண்ணி, ஷட்டிங் தேதிலாம் முடிவு பண்ணினோம்.

ஆனால், படப்பிடிப்பு ஆரம்பிக்கிற அன்னைக்குக் காலையில எனக்கு இந்த படம் வேண்டாம்னு சொல்லிட்டார். அது மட்டுமில்லாம, அது, இதுன்ன நிறைய கேள்விகள்.

அவரோட அறிக்கை என்னை அப்செட் பண்ண வச்சாலும், அதுவும் ஒரு நிம்மதியாதான் இருந்தது.  என்ன நடந்ததுன்னு எங்க இரண்டு பேருக்கும் தெரியும்கறதால அமைதியா இருந்தேன்.

என்ன ஒண்ணு அந்த படத்துக்காக ரஷ்மான் டேட்ஸ் அத்தனையும் வீணாப் போச்சு. ஆனால், இப்போ சிம்பு நடிக்கிற படத்துக்கு நான் கதை சொன்னதும் ட்யூன் அனுப்பிட்டார். இங்கே ரொம்ப நல்லவங்களும் இருக்காங்கன்னு நினைச்சிக்கிட்டேன், ” என்று கூறியுள்ளார்.

கௌதம் சொல்வதை வைத்துப் பார்க்கும் போது இருவருக்குமிடையே நடந்துள்ளது ஒரு ‘ஈகோ’ மோதல்தான் என்பது புரிகிறது.

பல கூட்டணிகள் பிரிவதற்குக் காரணம் அது மட்டுமே…

Read Previous

100 கோடி படங்களின் நாயகி…

Read Next

‘பிரியாணி’ படத்தில் கார்த்தி ஒரு ‘வுமனைசர்’ – அதிர்ச்சி அளித்த வெங்கட் பிரபு

Most Popular