A 1 சர்ச்சை, பப்ளிசிட்டிக்காக செய்கிறார்கள்- சந்தானம்

சர்க்கிள் பாக்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில், ஜான்சன் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், சந்தானம், தாரா அலிசா பெரி மற்றும் பலர் நடிக்கும் படம் A 1.

இப்படத்தின் இரண்டாவது டீசர் கடந்த வாரம் வெளியிடப்பட்டது.

அந்த டீசரில் ‘ஆப் பாயில் சாப்பிட்டு, தன் காதலை நிரூபிக்கும் அக்ரஹாரத்து மாமி’ என்ற வசனம் இடம் பெற்றிருந்தது. அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி சர்ச்சையானது.

இந்நிலையில் ‘A 1’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. அப்போது சந்தானத்திடம் இந்த சர்ச்சை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் இது சீப் பப்ளிசிட்டிக்காக சிலர் செய்வது என்றார்.

அவர் மேலும் பேசுகையில்,

“டீசருங்கறது படத்தை டீஸ் பண்றதுக்காக பண்ற ஒரு விஷயம். படமா பார்க்கும் போது யாரையும் புண்படுத்தறா மாதிரி இருக்காது.

காமெடின்னாலே அதுல ஒரு மோதல் இருந்தால்தான் வரும். சார்லி சாப்ளின், லாரல் ஹார்டி, நாகேஷ் கவுண்டமணி – செந்தில், வடிவேலு வரைக்கும் அப்படித்தான் இருக்கும். நமக்கு எதிரா ஒரு ரியாக்ஷன் பண்ணும் போதுதான் காமெடி நடக்கும்.

இந்தப் படத்துல ஒரு லோக்கல் பையனுக்கும், பிராமின் பொன்னுக்கும் இடையிலான கதைன்னு சொல்லும் போது அதுக்குள்ளதான் காமெடி பண்ண முடியும்.

படத்துல மத்தபடி யாரையும் குறிப்பிட்டு எதுவும் புண்படுத்த. அது படம் பார்க்க வரவங்களுக்குப் புரியும்.

காமெடி பண்ணும் போது பிரீயா விடணும். இதைப் பண்ணக் கூடாது, அதைப் பண்ணக் கூடாதுன்னு சொன்னா எப்படி காமெடி பண்ண முடியும். அப்புறம் தியேட்டர் போய் எல்லார் அக்குள்ளயும் கிச்சுகிச்சு மூட்டிதான் சிரிக்க வைக்கணும்.

ஒரு பிரீடம் இல்லாம காமெடி பண்ண முடியாது. அதே சமயத்துல யாரையும் புண்படுத்ததக் கூடாது, அதை நான் ஒத்துக்கறன். இப்பக் கூட ‘டகால்டி’ படத்துல ஸ்மோக் பண்ற மாதிரி போஸ்டர் வந்ததும் தப்புன்னு சொன்னாங்க, நான் மன்னிப்பு கேட்டேன்.

அதுக்காக எல்லாத்தையுமே தப்பு தப்புன்னா. இதெல்லாம் வேலை வெட்டி இல்லாம பப்ளிசிட்டிக்காக பண்ற விஷயம்.

என் படத்துல யாரையும் குறிப்பிட்டு நான் புண்படுத்தவே மாட்டேன். அப்படி செய்யற ஆளும் கிடையாது.

பாலிவுட், தெலுங்கு, மலையாளத்துல பார்த்தால் காமெடி எக்ஸ்டிரீம் போறாங்க. இருந்தாலும் காமெடி இல்லை. இங்க, ரொம்ப கட்டுப்பாடு. அதுக்குள்ளயே காமெடி பண்ணுன்னா எப்படிதான் பண்றது.

இப்படி சர்ச்சையைக் கிளப்பறவங்க சீப் பப்ளிசிட்டிக்காகத்தான் பண்றாங்க.

Read Previous

பிகில் – சிங்கப்பெண்ணே……பாடல் வரிகள் வீடியோ…

Read Next

குறும்படங்களுக்காக பிரத்யேக செயலி ‘Shortflix’