‘ஆர்வக் கோளாறு’ படத்தில் அனிருத்…

akkoஇன்றைய இளைஞர்களைக் கவரும் இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருபவர் அனிருத்.

இவர் தற்போது இசையமைத்து வரும் படங்களில் ஒன்று ‘ஆக்கோ’ அதாவது ‘ஆர்வக் கோளாறு’ என்பதின் சுருக்கம்.

இப்படத்தை ரெபெல் ஸ்டுடியோஸ் சார்பில் தீபன் பூபதி, ரதீஷ் வேலு ஆகியோர் தயாரிக்கிறார்கள். ஷ்யாம் இப்படத்தை இயக்குகிறார்.

இவர் சொன்ன கதையைக் கேட்டு வியந்து போன அனிருத் உடனடியாக இசையமைக்க சம்மதித்தாராம்.

படத்தைப் பற்றி இயக்குனர் ஷ்யாம் கூறுகையில்,

“மூன்று ஆர்வக் கோளாறு இளைஞர்களின் ஆர்வத்தால் ஒரு இரவில் நடக்கும் சம்பவங்களே ‘ஆர்வக் கோளாறு’  படத்தின் கதை.  ‘ஆக்கோ’ நகைச்சுவை கலந்த ஒரு ஆக்ஷன் படம். எந்த குறிப்பிட்ட வயதினரையோ, வகுப்பினரையோ கவர மட்டுமே எடுக்க பட்ட படமல்ல . எல்லோரையும் எப்போதும் கவரும் படம் இது. அனிருத்தின் பாடல்கள் 2014 ஆண்டின் மிகச் சிறந்த பாடல்களாக இருக்கும் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை,” என்கிறார்.

இப்படத்தின் முதல் பார்வையைக் கூட அனிருத்தை வைத்தே விளம்பரப்படுத்தியிருக்கிறார்கள்.

Read Previous

‘புறம்போக்கு’ படத்தில் புதிதாக சேர்ந்த ஷாம்…

Read Next

V 4 – Awards 2013