வசந்த், பிரகாஷ் தயாரிப்பில், தருண்பிரபு இயக்கத்தில், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் , டேனியல், ராட்டினம் சுவாதி, ஜார்ஜ் , ஆதித்யா டிவி டாப்பா, அஞ்சலி ராவ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கருப்பு காக்கா’.
காமெடி கலந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் படமான இதில், ராஜேந்திரன் படம் முழுவதும் வரும் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
பேய்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து கதை எழுதச் சென்ற ஒருவரின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவம்தான் இந்தப் படத்தின் கதை.
இப்படத்தின் முதல் பார்வையை இயக்குனர், ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் வெளியிட்டார்.
விரைவில் இப்படம் வெளியாக உள்ளது.