‘பிக் பாஸ்’ வீட்டில் கார்த்தி, சூரி, பாண்டிராஜ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியில் இதுவரை சிறப்பு விருந்தினர்கள் யாரும் நுழையவில்லை.

முதல் முறையாக இந்த சீசனில் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் இயக்குனர் பாண்டிராஜ், நாயகன் கார்த்தி, நகைச்சுவை நடிகர் சூரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வீட்டிற்குள் சென்றுள்ளார்கள்.

இந்த நிகழ்ச்சி இன்று ஜுலை 13ம் தேதி, வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

கார்த்தி, சூரி, பாண்டிராஜ் ஆகியோர் வீட்டிற்குள் உள்ள போட்டியாளர்களுடன் கலகலப்பாக உரையாடுகிறார்கள்.

2 டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் இமான் இசையமைப்பில், கார்த்தி, சாயிஷா, பிரியா பவானி சங்கர், அர்த்தனா, சூரி, சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ள ‘கடைக்குட்டி சிங்கம்’ படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

Read Previous

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிக்கும் ‘96’ டீசர்

Read Next

விஜய் மில்டன் வெளியிட்ட ‘கருப்பு காக்கா’ முதல் பார்வை