அருள்நிதி ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத்

2017ம் ஆண்டின் பெரிய வெற்றிப் படமான ‘விக்ரம் வேதா’ படத்தின் கதாநாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத், அறிமுக இயக்குனர் பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

படத்தில் ஷ்ரத்தாவின் கதாபாத்திரம் பற்றி இயக்குனர் பரத் நீலகண்டன் கூறுகையில்,

“படத்தில் ஷ்ரத்தாவின் கதாபாத்திரம் மர்மமான ஒன்றாக இருக்கும். படம் பார்க்கும் போது ரசிகர்கள் அவர் யார், அவருடைய நோக்க என்ன என்று யோசிப்பார்கள். ‘விக்ரம் வேதா’, கன்னடப் படமான ‘யு டர்ன்’ ஆகிய படங்களில் அவருடைய கதாபாத்திரம் எப்படி இருந்ததோ, அதோடு இந்தப் படத்தின் கதாபாத்திரமும் அமைந்திருக்கும்,” என்கிறார் இயக்குனர் பரத்.

இப்படத்தில் நடிப்பது பற்றி ஷ்ரத்தா கூறும் போது,

“இப்படத்தில் என்னை நடிக்க வைக்க அவர்கள் முன்பே திட்டமிடவில்லை. அது திடீரென்று நிகழ்ந்தது. இப்படத்தின் கதையைப் பற்றி விவரிப்பதற்காக இயக்குனர் பரத் பெங்களூருக்கு வந்திருந்தார். வழக்கமாக, இரவில் கதை கேட்பதற்கு நான் விரும்ப மாட்டேன். ஆனால் பரத் இரவு 9 மணியிலிருந்து 11 மணி வரை கதையைச் சொன்னார்.

ஒவ்வொரு காட்சியையும் எந்த இடையூறும் இல்லாமல் இணைத்து பகுதி, பகுதியாக அவர் எவ்வாறு வடிவமைத்திருக்கிறார் என்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். இந்தத் திரைப்படத்தை ஒரு த்ரில்லர் படம் என்று நான் கூறமாட்டேன்,. இந்தப் படம் ஒரு உளவியர் ரீதியிலான படம்,” என்கிறார் ஷ்ரத்தா.

எஸ்பி சினிமாஸ் சார்பில் சங்கர் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இசை தர்புகா சிவா.

இப்படத்தின் பூஜை நேற்று நடந்து படப்பிடிப்பும் ஆரம்பமாகியுள்ளது.

Read Previous

கடைக்குட்டி சிங்கம் – விமர்சனம்

Read Next

‘கடைக்குட்டி சிங்கம்’ வரவேற்பு, நெகிழ்ச்சியில் சூர்யா