‘மெட்ராஸ்’ படத்தில் கார்த்தியின் நண்பராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் ‘கலையரசன்’. தன் யதார்த்தமான நடிப்பின் மூலம் பலரது பாராட்டைப் பெற்ற கலையரசன், ‘மைலாஞ்சி’ என்னும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
ரேகா மூவிஸ் தயாரிக்கும் இந்த படத்தை பிரபல எழுத்தாளரான அஜயன் பாலா கதை, வசனம் எழுதி இயக்குகிறார். பிரபல இயக்குனர் விஜய்யுடன் இணைந்து இப்படத்தின் திரைக்கதையை அமைக்கிறார் அஜயன் பாலா.
கிஷோர், ஈஸ்வரி ராவ், எழுத்தாளர் வேலா ராமமூர்த்தி, மதுரை முத்து மற்றும் பலரும் இப்படத்தில் நடிக்க உள்ளனர். படத்திற்கான கதாநாயகி தேர்வு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்குனர் தங்கர்பச்சன் இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். கோபி படத் தொகுப்பை செய்ய, ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைக்க நா.முத்துக்குமார் பாடல்களை எழுதுகிறார்.
விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.