‘கத்தி’ படத்தில் ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக ஏதாவது ஒரு புதிய சர்ச்சையை கிளம்பி வந்து கொண்டேயிருக்கிறது. கதை, காட்சிகள், இசை, போஸ்டர் டிசைன், என ஒன்றன் பின் ஒன்றாகப் பல புதிய விஷயங்களை சமூக வலைத்ததளத்தை பயன்படுத்துவோர் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
சமீபத்தில் ‘கத்தி’ படத்தில் இடம் பெற்றிருந்து ‘சில்லறை’ சண்டைக் காட்சியையும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சில்லறைத்தனமாக காப்பியடித்திருக்கிறார் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
அந்த ‘சில்லறை’ சண்டைக் காட்சி, 1974ம் ஆண்டு வெளிவந்த ‘பிளாக் பெல்ட் ஜோன்ஸ்’ என்ற திரைப்படத்திலிருந்து சுடப்பட்டிருக்கிறது. ராபர்ட் கிளவுஸ் என்ற இயக்குனர் இயக்கியுள்ள அந்தப் படத்தில் ‘கத்தி‘ படத்தில் வந்த சண்டைக் காட்சி இடம் பெற்றுள்ளது. கரண்ட்டை நண்பனை விட்டு ஆன்-ஆஃப் செய்யச் சொல்லி படத்தின் நாயகன் ஜிம் கெல்லி அவரைத் தாக்க வந்த பலரை அடித்துத் துவைப்பதாக அந்தக் காட்சி இடம் பெற்றுள்ளது.
தமிழில் புதிதாக ‘சில்லறை’க் காசுகளை மட்டும் சேர்த்திருக்கிறார்கள். கூகுளில் தேடிக் கண்டுபிடித்தார்களா, அல்லது டிவிடி வாங்கி கண்டுபிடித்தார்களா என்பது அவர்களுக்கே வெளிச்சம்… ம்ம்ம்..நியாயமாக ‘இருட்டு’ என்றுதான் சொல்ல வேண்டும்.
Black Belt Jones – Fight Scene…Video…
Black Belt Jones – Movie…Trailer