‘லிங்கா’ இசை வெளியீடு 16ம் தேதி…

lingaa audio launch newsதமிழ்த் திரையுலகமே ஒன்று கூடி எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் ‘லிங்கா. கே.எஸ்.ரவிக்குமார் – ரஜினிகாந்த் கூட்டணியின் மூன்றாவது படமாகத் தயாராகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் நிறைவடைந்தது.

‘கோச்சடையான்’ படம் ஒரு மோஷன் கேப்சரிங் படமாக அமைந்து விட்டதால் அதை ரஜினிகாந்த் நடித்த படமாக அவருடைய ரசிகர்களே நினைக்காமல் போய்விட்டார்கள்.

இருந்தாலும் ரஜினிகாந்த் அவருக்கே உரிய ஸ்டைல் நடிப்பில் ‘லிங்கா’ டீசரிலேயே ரசிகர்களைக் கவர்ந்து விட்டார். படத்தின் பாடல்கள் இப்போதே மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாடல் வெளியீட்டை முதலில் வரும் 9ம் தேதி வைப்பதாக இருந்தார்கள். ஆனால், தற்போது 16ம் தேதிக்கு மாற்றிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏ.ஆர். ரகுமான் படத்தின் பாடல்களுக்கான இறுதி இசை வடிவத்தை ஆடியோ கம்பெனிக்கு தருவது கொஞ்சம் தள்ளிப் போய்விட்டதாம்.

அதனால், கடைசி நேரத்தில் இந்த மாற்றம் என்கிறார்கள்.

Read Previous

சினிமாவைக் கெடுப்பவர்கள் யார்…? ஆர்.கே.செல்வமணி பேச்சு…

Read Next

‘காக்கிச் சட்டை’ தலைப்பின் பின்னணி…