இளையராஜா இசையில் பாடிய விஜய் ஆண்டனி…

ilaiyaraja vijay antony sa chandrasekaranஎஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டூரிங் டாக்கீஸ்’ படத்தில் இளையராஜா இசையமைப்பில் விஜய் ஆண்டனி ஒரு பாடலைப் பாடியுள்ளார். இதற்கான ஒலிப்பதிவு சில தினங்களுக்கு முன்பு நடந்துள்ளது.

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய ‘சுக்ரன்’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. இளையராஜா இசையில் முதன் முறையாக விஜய் ஆண்டனி பாடியிருக்கிறார்.

‘டூரிங் டாக்கிஸ்’ படத்தின் முதல் பாதி இடைவேளை வரை ஒரு கதை. 75 வயதான ஒருவரின் காதல் தேடுதல். அந்த கதாபாத்திரத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன் நடித்திருக்கிறார்.

இடைவேளைக்கு பிறகு வரும் படம் முதல் கதையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு அழுத்தமான கிராமத்து பெண்ணின் கதையாகும். இந்த கனமான கதாபாத்திரத்தில் கேரள நடிகை சுனுலட்சுமி நடித்திருக்கிறார். இந்தக் கதையில் சமூகத்தில் நடக்கும் கொடுமைகளுக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறாராம் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன்.

இந்த இரண்டாவது கதைக்கு மட்டும் இசைஞானி இளையராஜா 10 நாட்கள் இசையமைத்திருக்கிறார். வசனமே இல்லாத பல காட்சிகளை உருக்கமான பாடல் வரிகளால் பிண்ணனி இசை அமைத்திருக்கிறார்.

இரண்டு கதைகளிலும் மொத்தம் ஏழு பாடல்கள். இதில் இளையராஜா, இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, கேரள இசையமைப்பாளர் ஷரத், நடிகர் விவேக், நடிகர் சத்யன் இவர்கள் பாடியிருப்பது சிறப்பு செய்தியாகும்.

படத்தொகுப்பை ஸ்ரீகர் பிரசாத்தும், ரஜிஷும் செய்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு அரூண் பிரசாத்.

எந்த படத்தையும் குறுகிய காலத்தில் முடிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகரன் இந்த படத்தை இரண்டு ஆண்டுகளாக உழைத்து மிகுந்த பொருட்செலவில் எடுத்திருக்கிறார்.

ஒரு படத்தில் வேறுபட்ட இரண்டு கதைகள் என்பது ரசிகர்களுக்கு மட்டுமல்ல, தமிழ் திரையுலகிற்கும் ஒரு புதுமையான முயற்சியாகும்.

Read Previous

‘கத்தி’ விவகாரம்…கோபி மீது முருகதாஸ் அவதூறு வழக்கு…

Read Next

கிரைம் த்ரில்லராக உருவாகியுள்ள ‘சூதனம்’…