நான் தனுஷின் ரசிகன் – ஹிந்தி இயக்குனர் பால்கி…

shamitabh - dhanush amitabh bachchan“சீனிகம், பா” போன்ற ஹிந்திப் படங்களை இயக்கிய பால்கி தற்போது அமிதாப் பச்சன், தனுஷ், அக்ஷரா ஹாசன் நடிக்க ‘ஷமிதாப்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

‘ராஞ்சனா’ படத்திற்குப் பிறகு தனுஷ் நடித்து வரும் ஹிந்திப் படம் இது. இந்தப் படத்தில் தனுஷை நடிக்க வைக்க என்ன காரணம் என சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் பால்கி தெரிவித்துள்ளார்.

“தனுஷ் ஒரு ஒரிஜனல் நடிகர். அவருடைய நடிப்பில் வேறு யாரையும் பார்க்க முடிவதில்லை. ‘ஷமிதாப்’ படத்தைப் பார்க்கும் போது அவரை ஏன் நான் நடிக்கத் தேர்ந்தெடுத்தேன் என்பது உங்களுக்குப் புரியும்.

‘காதல் கொண்டேன்’ படத்திலிருந்தே நான் அவருடைய ரசிகராக இருந்து வருகிறேன். ‘ஷமிதாப்’ படத்தில் தனுஷ் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை இப்போதே சொல்ல முடியாது. என் படத்தைப் பற்றி நான் எதுவும் சொல்லாத வரை எதையும் நம்பாதீர்கள், ” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இளையராஜா இசையமைக்கும் ‘ஷமிதாப்’ படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாக உள்ளது.

Read Previous

நடிகர் சங்க விவகாரம் – விஷாலுக்கு சரத்குமார் எச்சரிக்கை…

Read Next

கானா பாடகராக மகாபா ஆனந்த் நடிக்கும் ‘அட்டி’…