‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் ராஜேஷ் – ஆர்யா – சந்தானம் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது.
ஆர்யாவுடன் தமன்னா முதன் முறையாக இந்தப் படத்தில் ஜோடி சேர்கிறார். ‘வீரம்’ படத்திற்குப் பிறகு தமன்னா நடிக்கும் படம் இது. ஆர்யா தற்போது “மீகாமன், புறம்போக்கு, யட்சன்,” ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.
ராஜேஷ் இயக்கும் படத்திற்கு இமான் முதன் முறையாக இசையைமக்கிறார். இந்தப் படத்தில் பானு, வெண்ணிற ஆடை முர்த்தி, ரேணுகா, கருணாகரன், சித்தார்த் விபின், வித்யு லேகா மற்றும் பலர் நடிக்க உள்ளனர்.
ஆர்யாவின் சொந்தப் படத் தயாரிப்பு நிறுவனமான தி ஷோ பியூப்பிள் இப்படத்தைத் தயாரிக்கிறது.
“இந்த படம் வெறுமனே சிரித்து விட்டு போகக் கூடிய படமாக இருக்காது . சிரிக்க வைப்பதோடு சிந்திக்கவும் வைக்கும் படமாக இருக்கும். கண் கவரும் நேர்த்தியான ஒளிப்பதிவு மற்றும் இனிமையான பாடல்கள் என்று படத்தின் வெற்றிக்குத் தேவையான அத்தனை விஷயங்களும் படத்தில் இருக்கும். ஆர்யா- சந்தானம்- மற்றும் என்னுடைய கூட்டணியில் வெளி வந்த எங்களது முந்தைய படமான ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தின் வெற்றியையும் தரத்தையும் இந்த படத்திலும் தருவோம்’ என்று நம்பிக்கையோடு கூறுகிறார் இயக்குனர் ராஜேஷ்.
இப்படத்திற்கு ‘வாசுவும் சிவாவும் ஒண்ணா படிச்சவங்க’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.