தமிழ்த் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக மருத்துவத்தை முதன்மைப்படுத்தி ஒளிபரப்பாகும் நெடுந்தொடர் எனும் பெருமையை பெற்றுள்ளது உங்கள் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‘உயிர் மெய்’ தொடர்.
தனித்துவமான கதைக்களம், வலுவான கதாபாத்திரங்கள், அதற்கு உயிரளிக்கும் அற்புதமான நட்சத்திரங்களால் இத் தொடர் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிரப்பாகிய இத்தொடர், நேயர்களின் விருப்பத்திற்கேற்ப வரும் நாளை முதல் அதாவது, நவம்பர் 24ம்தேதி முதல் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
தயானந்த் அவர்கள் தமக்கு சொந்தமான மருத்துவமனையை அங்கு பணியாற்றும் தலைமை மருத்துவர் கவிதா சந்தீப்பிடம் ஒப்படைப்பதுடன், அதன் உரிமையையும் அவரது பொறுப்பில் விட்டுவிடுகிறார். ஆனால், இதை விரும்பாத தயானந்தின் மகன்கள், மருத்துவர் கவிதா சந்தீப்பின் பணிக்கு இடையூறு செய்வதுடன், அவரது சொந்த வாழ்க்கையிலும் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்.
இதனிடையே, சிக்கலான நோய்களை குணமாக்க ஒருபுறம் போராடும் கவிதா, மருத்துவமனையில் தங்கியுள்ள பொறுப்பற்ற நோயாளி மற்றும் அவரது மகனால் எண்ணற்ற தொல்லையையும் எதிர்கொள்ள நேரிடுகிறது.
மக்களுக்கு சேவையாற்றும் மருத்துவ வாழ்க்கையிலும், தமது சொந்த வாழ்க்கையிலும் உண்டாகும் இடர்களை, தனது திறமையால் கவிதா சந்தீப் தீர்வு காண்பதை, ‘உயிர் மெய்’ தொடர் வரும் வாரங்களில் சுவாரசியமாக விவரிக்க உள்ளது.
பத்ரி வெங்கடேஷ் எழுதியுள்ள இந்த விறுவிறுப்பான கதைக்கு, கிரண் இசையமைக்க, சுந்தர் கே விஜயன் இயக்கி வருகிறார்.
பொறுப்புள்ள தாயாகவும், மருத்துவராகவும் உருவாக்கப்பட்டுள்ள கவிதா சந்தீப்பீன் கதாபாத்திரத்திற்கு பிரபல நடிகை அமலா உயிர் கொடுத்துள்ளார். சின்னத்திரையில் முதன்முறையாக தோன்றும் அமலாவுடன், பிரபல நட்சத்திரங்கள் துர்கா, ஷில்பா, வி.எஸ். ராகவன் ஆகியோர் நடித்துள்ளனர்.
உங்கள் ஜீ தமிழ்த் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘உயிர் மெய்’ நெடுந்தொடரை காணத் தவறாதீர்கள்.