மேஜிக் பிரேம்ஸ் படநிறுவனம் சார்பில் சரத்குமார், ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் தயாரிப்பில் சரத்குமார் இரு வேடங்களில் நடித்து இயக்குனர் A.வெங்கடேஷ் இயக்கத்தில் உருவான ‘சண்டமாருதம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை, பிரசாத் லேப்பில் நடைபெற்றது.
அந்த விழாவுடன் சேர்ந்து மேஜிக் பிரேம்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் மூன்று படங்களின் அறிமுக விழாவும் நடைபெற்றது.
பாலாஜி மோகன் இயக்கத்தில் அனிருத் இசையைமப்பில் தனுஷ், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் ‘மாரி’ படத்தின் அறிமுக விழா, விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பில் விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் ‘இது என்ன மாயம்’ படத்தின் அறிமுக விழா, அறிமுக இயக்குனர் ஆடம் தாசன் இயக்கத்தில் அஜிஸ் அசோக் இசையமைப்பில் பாபி சிம்ஹா நடிக்கும் ‘பாம்பு சட்டை’ ஆகிய படங்களின் அறிமுக விழாவும் நடைபெற்றது.
விழாவில் சரத்குமார், தனுஷ், விக்ரம் பிரபு, விமல், மோகன், நரேன், பிரசன்னா, ராதாரவி, விஜயகுமார், சார்லி, மோகன்ராம், ராம்கி, பாபி சிம்ஹா, பரத், மயில்சாமி, ஜெயபிரகாஷ், அருண் சாகர், ரோபோ சங்கர், மிதுன், ஜெயஸ்ரீ, ஓவியா, நமீதா, லிசி, ஸ்ரீபிரியா, லஷ்மி ராமகிருஷ்ணன், நிரோஷா, கீர்த்தி சுரேஷ், கே.எஸ்.ரவிகுமார், A.வெங்கடேஷ், பாலாஜி மோகன், வி.சேகர், சுசீந்திரன், மதன் கார்கி எஸ்.எஸ்.ஸ்டான்லி, சமுத்திரகனி, ஆர்.கே.செல்வமணி, சண்முகசுந்தரம், ஆடம் தாசன், கே.ஆர்., கலைப்புலி எஸ்.தாணு, கே.ராஜன், திருச்சி ஸ்ரீதர், யாகியா, அபிராமி ராமநாதன், எஸ்.எ.ராஜ்கண்ணு, கே.ஆர்.செல்வராஜ், அருள்பதி, பெப்சி ஜி.சிவா, ஏ.என்.சுந்தரேசன், மதன்கார்கி, நிரவ் ஷா, எல்.எம். எம். சுவாமிநாதன் உட்பட பல திரையுலகப் பிரமுகர்கள் கலந்துகொண்டு பேசினார்கள்.
தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்திரி இசைத் தட்டை வெளியிட இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், தனுஷ், விக்ரம்பிரபு மற்றும் அனைவரும் பெற்றுக் கொண்டனர்.
தயாரிப்பாளர்கள் சரத்குமார்,லிஸ்டின்ஸ்டீபன் மற்றும் ‘சண்டமாருதம்’ படத்தின் இயக்குனர் A.வெங்கடேஷ் ஆகியோர் நன்றி கூறினார்கள்.