தமிழ் திரையுலகில் பல்வேறு புகழ் பெற்ற நடிகர்கள் அவர்களது குரல் வளத்தால் நல்ல பெயரைப் பெற்றுள்ளனர். ஆனால், குறுகிய காலத்தில் தனது ‘கரகர’ குரல் வளத்தின் மூலம் எல்லோரையும் கவர்ந்தவர் VTV கணேஷ்.
‘‘விண்ணைத்தாண்டி வருவாயா, வானம், ஒஸ்தி, இங்க என்ன சொல்லுது, கண்ணா லட்டு தின்ன ஆசையா’, நவீன சரஸ்வதி சபதம்’, போடா போடி” என பல படங்களில் நகைச்சுவை நடிப்பால் ரசிக்க வைத்த விடிவி கணேஷ் நடித்து விரைவில் வெளிவர உள்ள ‘கப்பல்’.
“கப்பல்’ படம் ஃப்ரெண்ட்ஷிப் லவ்னு ஜாலியா யூத்தா இருக்கிற ஒரு படம். நான் தான் காதலை சேர்த்து வைக்கும் ‘தேவதையாக’ வருகிறேன். வைபவ்-க்கு ஹெல்ப் பண்ற நான் ‘கார் குரல் கண்ணன்’. படத்தில் மட்டும் இல்லை, நிஜ வாழ்க்கையிலும் ஒரு லவ் டாக்டரா என்னை பார்க்கிறார்கள். சில பேர் அவங்க அப்பா அம்மாகிட்ட பேசி சேர்த்து வைக்கச் சொல்றாங்க” என சிரித்தார்.
‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் மூலம் கிடைத்த புகழை ‘கப்பல்’ படம் எனக்கு மீண்டும் பெற்றுத் தரும். ‘I’ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை ‘S’ பிக்சர்ஸ் வெளியிட உள்ளது. ‘I’ ஃபார் இன்ட்ரெஸ்டிங், ‘S’ ஃபார் சூப்பர், இந்த இரண்டு வார்த்தையும் ஒரு ‘கப்பல்’ அளவுக்கு இந்தப் படத்தில் கிடைக்கும்” என்கிறார் VTV கணேஷ்.