‘என்னை அறிந்தால்’ – பிப்ரவரி 5-ல் தான் வெளியீடு…

yennai arinthaal first look poster newsகௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய் மற்றும் பலர் நடிக்கும் ‘என்னை அறிந்தால்’ படம் அடுத்த மாதம் 5ம் தேதிதான் வெளியாக உள்ளது.

முதலில் இப்படம் 29ம் தேதி வெளியாகும் என தயாரிப்பாளர் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படத்தின் சென்சார் இன்னும் முடிவடையாததாலும், இறுதிக்கட்டப் பணிகளை திட்டமிட்டபடி முடிக்க முடியாததாலும் படத்தை மேலும் ஒரு வாரத்திற்கு தள்ளி வைத்திருக்கிறார்கள்.

ஏற்கெனவே, பொங்கலுக்கு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட படம், 29ம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டு, தற்போது பிப்ரவரி 5க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை சற்று முன்னர்  ‘என்னை அறிந்தால்’ படத்தின் வெளியீடு பற்றிய  தகவலை படத்தின் வெளிநாட்டு வினியோக உரிமையை வாங்கியுள்ள ஐங்கரன் நிறுவனம் அறிவித்துள்ளது.

Read Previous

பிப்ரவரி 6-ல் ‘வஜ்ரம்’ வெளியீடு…

Read Next

‘ரொம்ப நல்லவன்டா நீ’… படத்தோட தலைப்புதான் இது…