‘ஐ’ வசூல் – அறுபது கோடி…

i tamil movie image‘ஐ’ படம் பொங்கலுக்கு ஒரு தினம் முன்னதாகவே வெளிவந்து, மொத்த பொங்கல் விடுமுறையான 5 நாட்களிலேயே அமோக வசூலை அள்ளியது.

வேறு எந்தப் படமும் பெரிதாக போட்டிக்கு இல்லாத நிலையில் ‘ஐ’ திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, தென்னிந்தியாவிலும், உலக நாடுகளிலும் பலத்த வரவேற்புடன் ஓடி வருகிறது.

நேற்றுடன் முடிந்த இரண்டு வாரத்தில் ‘ஐ’ திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 60 கோடி ரூபாய் வசூலித்திருக்கும் என திரையரங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உலகம் முழுவதும் வசூலான தொகையைக் கணக்கில் கொண்டார் 200 கோடி ரூபாயைத் தொட்டுவிட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

தமிழ்நாட்டைப் போலவே தெலுங்கிலும் ‘ஐ’  படம், நேரடித் தெலுங்குப் படங்களை விட அதிகமாக வசூலித்துள்ளதாம். அங்கு மட்டும் சுமார் 40 கோடிக்கும் மேல் வசூலாகியிருக்கும் என்கிறார்கள்.

உலக அளவில் வெற்றிகரமாக ஓடிய தமிழ்ப் படங்களைப் பொறுத்தவரையில் ‘எந்திரன்’ படத்திற்குப் பிறகு ‘ஐ’ படம் தற்போது இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. ‘கத்தி’ படத்தின் வசூல் சாதனையை ‘ஐ’ ஏற்கெனவே முறியடித்துவிட்டதாம்.

போகப் போக அது ‘எந்திரன்’ வசூலை முறியடிக்குமா என்பதுதான் அடுத்த கேள்வி….?

Read Previous

‘Baahubali’ Talkie Part Completed

Read Next

தயாரிப்பாளர் சங்க ஆதரவுடன் வரும் ‘C2H’…

Most Popular