500 தியேட்டர்களில் வெளியாகும் ’60 வயது மாநிறம்’

தமிழ் சினிமாவில் பல தரமான படங்களைக் கொடுத்த கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘60 வயது மாநிறம்’.

ராதாமோகன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி, இந்துஜா மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

இப் படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து அனைத்துத் தரப்பு மக்களின் எதிர்ப்பார்ப்புக்கும் உரிய படமாக மாறியிருக்கிறது.

இந்தப் படம் தனது பெருமைக்குரிய தயாரிப்பு என கலைப்புலி தாணு ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகும் இப்படத்திற்கு தமிழகத்தில் மட்டும் இந்தப் படத்துக்கு 300 அரங்குகள் கிடைத்துள்ளன. வெளி மாநிலங்கள், வெளிநாடுகள் என 500-க்கும் மேற்பட்ட அரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது.

இந்தப் படம் குறித்து தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கூறுகையில், “உண்மையிலேயே எனது பெருமைக்குரிய தயாரிப்புகளில் இந்தப் படமும் ஒன்று. எனக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தரும். மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. அதற்கேற்ப நல்ல திரையரங்குகள் கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது,” என்றார்.

Read Previous

Adangathey – Official Trailer

Read Next

மேற்குத் தொடர்ச்சி மலை – விமர்சனம்