மலையாளத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் திலீப். காதல் மனைவி மஞ்சு வாரியாரை பிரிந்த பின் அவருடைய வெற்றி ராசி குறைந்துவிட்டதாக மலையாளத் திரையுலகில் பேசிக் கொள்கிறார்கள். அதோடு ராசியான நடிகைகளாக இருப்பவர்களும் திலீப்புடன் ஜோடி சேர்ந்து தோல்வியைச் சந்தித்து வருவதாகவும் தெரிவிக்கிறார்கள்.
தற்போது திலீப் நடித்து வெளிவந்துள்ள ‘இவன் மரியாதைராமன்’ படம் ரசிகர்களின் வரவேற்பு இல்லாமல் தோல்வியடைந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். இந்தப் படம் தமிழில் சந்தானம் நாயகனாக நடித்து வெளிவந்த ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தின் ரீமேக்காகும். இதன் ஒரிஜனல் படமான ‘மரியாதை ராமண்ணா’ தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற படம்.
திலீப் இதற்கு முன் நடித்து வெளிவந்த “வில்லாளி வீரன், அவதாரம்” ஆகிய படங்களும் பெரிதாக வெற்றி பெறவில்லை.
இப்போது மீண்டும் தமிழில் ஒரு படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். திலீப் 2002ம் ஆண்டு விஜயகாந்த் நடித்த ‘ராஜ்ஜியம்’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர். சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் தமிழுக்கு நடிக்க வருகிறார்.
இந்தப் படத்தை ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தை இயக்கிய ஸ்ரீநாத் இயக்க உள்ளாராம்.