‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ படத்தைத் தொடர்ந்து சந்தானம் நாயகனாக நடிக்கும் படம் ‘இனிமே இப்படித்தான்’.
இந்தப் படத்தை சந்தானம் தனது சொந்தப் படத் தயாரிப்பு நிறுவனமான ஹேன்ட் மேட் பிலிம்ஸ் சார்பாக தயாரிக்கிறார். முருகானந்த் இந்தப் படத்தை எழுதி இயக்குகிறார்.
சந்தானம் ஜோடிகளாக ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ படத்தில் நடித்த ஆஷ்னா சவேரி, ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் நடித்த அகிலா கிஷோர் ஆகிய இருவரும் நடிக்கிறார்கள்.
சந்தோஷ் குமார் தயாநிதி இசையமைக்கும் இந்தப் படத்தில் கபிலன், மதன் கார்க்கி, கானா பாலா, டாக்டர் உமா தேவி, கானா வினோத் பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.
படப்பிடிப்பு பரப்பாக நடந்து வரும் இந்தப் படத்தின் முதல் பார்வை சற்று முன்னர் வெளியிடப்பட்டது.