‘காஞ்சனா 2’ – ரஜினிகாந்த் பாராட்டு

ராகவா லாரன்ஸ் நாயகனாக நடித்து இயக்கியுள்ள ‘காஞ்சனா 2’ படம் நாளை மறுநாள் 17ம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாக உள்ளது.

இப்படத்தை உலகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது.

சினிமா ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் திரையுலகத்தில் வினியோகஸ்தர்களிடமும், தியேட்டர்காரர்களிடமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. இந்தப் படத்தில் லாரன்ஸ் 70 வயது கிழவியாகவும் நடித்துள்ளார், 7 வயது சிறுவனாகவும் நடித்துள்ளார்.

அந்த வித்தியாசமான தோற்றத்தை பார்த்த ரஜினிகாந்த், “இப்படி ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள உனக்கு அந்த ராகவேந்திரர் ஆசி எப்போதும் உண்டு, இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும்,” என்று பாராட்டியுள்ளார்.

Read Previous

Inimey Ippadithan – Motion Poster

Read Next

Maniratnam On ‘Ok Kanmani’ – Video Interview – Part 1

Most Popular