மனிதனின் தவறைச் சொல்லும் ‘திறந்திடு சீசே’…

சுதாஸ் புரொடக்சன் சுதா வீரவன் ஸ்டாலின் தயாரிக்கும் படம் ‘திறந்திடு சீசே’. இயக்குனர் ஷங்கரிடம் இணை இயக்குனராகப் பணிபுரிந்த நிமேஷ் வர்ஷன் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

வீரவன் ஸ்டாலின் இப்படத்தைத் தயாரிப்பதோடு கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். தன்ஷிகா, நாராயண், அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

படத்தைப் பற்றி இயக்குனர் நிமேஷ் கூறியதாவது,

“இவ்வளவு துணிவான ஒரு கதையை தயாரிக்க முன் வந்ததோடு , மற்றவர் நடிக்கத் தயங்கும் ஒரு கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்துள்ளார் வீரவன் ஸ்டாலின். தன்ஷிகா ஒரு திறமையான நடிகை என்பதில் யாருக்கும் இரண்டாவது அபிப்ராயம் இருக்கப் போவது இல்லை. இந்தப் படத்தில் அவர் அற்புதமாக நடித்துள்ளார்.

ஒவ்வொரு மனிதனும் ஒரு அலாவுதீன் விளக்கு போல, அவர்களுக்குள் இருக்கும் பூதம் அவ்வபோதுதான் வெளி வரும். அந்தத் தருணம் அவர்களை சுற்றி இருப்பவர்களுக்கு என்ன நன்மை, தீமைகள் நடக்கிறது என்பதை சுவாரசியம் நிறைந்த திருப்பங்களுடன் சொல்லும் படம்தான் ‘திறந்திடு சீசே’ திரைப்படம். மனிதன் அவன் இயல்பு நிலையில் இருந்து தவறும்போது ஏற்படும் நிகழ்வுகளை கூறியுள்ளோம்.

,குளஞ்சி குமார் ஒளிப்பதிவை மேற்கொள்ள, விஜய் படத்தொகுப்பில், மோகன்ராஜன் வரிகளில் கணேஷ் ராகவேந்திரா இசையமைத்துள்ளர்.

எல்லா இளைஞர்களுக்கும் பிடிக்கிற வகையில் நகைச்சுவை கலந்த த்ரில்லர் படமாக எடுத்துள்ளோம். போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முழு வீச்சில் நடந்து வருகிறது,” என்கிறார் இயக்குனர் நிமேஷ் வர்ஷன்.

Read Previous

Maniratnam On ‘Ok Kanmani’ – Video Interview – Part 2

Read Next

Kaakka Muttai – Official Trailer

Most Popular