ராகவா லாரன்ஸ் இயக்கம் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த ‘காஞ்சனா 2’ படம் உலகம் முழுவதும் நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் படம் மிகப் பெரும் ஹிட் ஆகியுள்ளது என கோடம்பாக்கத்தில் தெரிவிக்கிறார்கள்.
ரஜினிகாந்த், விஜய் ஆகிய இருவரும் ‘காஞ்சனா 2’ படத்தைப் பாராட்டியதைத் தொடர்ந்து இப்போது இயக்குனர் ஷங்கர் படத்தைப் பற்றி பாராட்டியுள்ளார்.
“காஞ்சனா 2’ படம் பார்த்தேன். கோவை சரளாவின் ஸ்லாப்ஸ்டிக் காமெடி சூப்பராக உள்ளது. பல திறமைகளடங்கிய ராகவா லாரன்ஸ், அந்த சிறிய பெண்ணாக பாடலில் நடித்திருப்பது மிக அற்புதம்,” எனப் பாராட்டியுள்ளார்.
‘காஞ்சனா 2’ படம் வெளியான ஒரு வாரத்திற்குள்ளாகவே சுமார் 25 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.