ராகவா லாரன்ஸ் இயக்கி, நாயகனாக நடித்துள்ள ‘காஞ்சனா 2’ படம் மிகப் பெரும் நடிகர்களின் படங்கள் அளவிற்கு வசூலைக் குவித்து வருவதாக வினியோக வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
கடந்த வெள்ளியன்று 17ம் தேதி வெளியான ‘காஞ்சனா 2’ திரைப்படம் முதல் வார முடிவில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 30 கோடி வரை வசூலித்துள்ளதாம். கேரளாவிலும் படத்திற்கு மிகப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. கர்நாடகாவிலும் குறிப்பிடத்தக்க அளவில் வசூலைக் குவித்து வருகிறது.
மற்ற மாநிலங்கள், வெளிநாடுகள் என அனைத்தையும் சேர்த்து சுமார் 6 கோடி வரை வசூலித்துள்ளதாக கணக்குச் சொல்கிறார்கள். மொத்தமாக உலகம் முழுவதும் முதல் வாரத்தில் 35 கோடி வரை வசூலை அள்ளியிருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வசூல், ரஜினிகாந்த், கமல், விஜய், அஜித் படங்களுக்கு நிகரான வசூல் என்று தியேட்டர்காரர்கள் தெரிவிக்கிறார்கள்.