சீமராஜா, கவனமாகத் தேர்வு செய்த ஆடைகள் – அனு பார்த்தசாரதி

24 ஏஎம் ஸ்டுடியோஸ் ஆர்.டி.ராஜா தயாரிப்பில், பொன்ராம் இயக்கத்தில், இமான் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி, நெப்போலியன், சிம்ரன், லால் மற்றும் பலர் நடிக்கும் படம் சீமராஜா.

இப்படத்தின் டிரைலர், பாடல்களைப் பார்த்த ரசிகர்கள் நிச்சயம் சிவகார்த்திகேயன் அணிந்துள்ள ஆடை அழகையும் ரசிப்பார்கள். படத்தில் ராஜா கதாபாத்திரத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயனுக்காக மிக கவனமாக ஆடை வடிவமைப்பைச் செய்ததாக ஆடை வடிவமைப்பாளர் அனு பார்த்தசாரதி கூறுகிறார்.

“வெறும் வேட்டி, சட்டை மட்டுமின்றி பாடல்கள் மூலமாக வண்ணங்கள் தெறிக்கும் வகையில் ஆடை வடிவமைப்பு இருக்க வேண்டும். அந்த உடை அமைப்பு பின்னணி அமைப்புக்கு தோதாக இருக்க வேண்டும்.

anu parthasarathyபொன்ராம் படம் என்றாலே அது வண்ண மயமாக இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. கதை உருவாகும் கால கட்டத்திலேயே ஆடை வடிவமைப்பாளரையும் கலந்தாலோசிக்கும் முறையை இயக்குனர் பொன்ராம் கொண்டு வந்து இருக்கிறார். இது எங்களது பணியை சுலபமாக்கியது.

சிவகார்திகேயன் இந்தப் படத்தில் தனது உற்சாகத்துக்கு தோதான ஆடை அணிந்து இருக்கிறார். மேற்கத்திய மற்றும் பாரம்பரிய உடைகள் இரண்டுமே அவருக்கு பொருந்தி இருக்கிறது.

இயக்குனர் பொன்ராமும், ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியமும் மிகுந்த கவனத்துடன் உடைகளை தேர்ந்தெடுத்தார்கள். இன்று எல்லோராலும் பெரிதளவு விவாதிக்கப்படும் அந்த இளவரசன் தோற்றத்துக்கு மிகவும் உழைத்தோம். படத்தில் உள்ள ஒவ்வொரு பாட்டும் வெவ்வேறு பின்னணியில் படமாக்கப்பட்டுள்ளது. அதற்கேற்றவாறு உடைகள் தேர்ந்து எடுத்து பாடல்களை படமாக்கி உள்ளோம்.

குறிப்பாக சிவகார்த்திகேயன் அறிமுகப் பாடலில் அவர் அணிந்து இருந்த குர்தா உட்பட மற்ற எல்லா அணிகலன்களும் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டவை. குழந்தைகள், இளைஞர்கள் என பலரையும் கவரும் சிவகார்த்திகேயன் இந்த படத்தின் மூலம் எல்லா தரப்பு ரசிகர்களையும் கவருவார். ‘சீமராஜா’ வசூல் ராஜாவாக நிச்சயம் திகழ்வான்,” என உறுதியாகக் கூறுகிறார் அனு பார்த்தசாரதி.

வினாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளை மறுநாள் செப்டம்பர் 13ம் தேதி சீமராஜா வெளியாகிறது.

Read Previous

சீமராஜா, திருவிழா அதிர்வு – பாடலாசிரியர் யுகபாரதி

Read Next

சீமராஜா, நல்ல அனுபவத்தைத் தரும் – பொன்ராம்