‘சேஸிங்’ காட்சிக்காக ஆர்.கே அமெரிக்காவில் பயிற்சி…

மக்கள் பாசறை பட நிறுவனம் தயாரிப்பில் ஆர்.கே. நாயகனாக நடிக்க, நீது சந்திரா நாயகியாக நடிக்கும் படம் ‘வைகை எக்ஸ்பிரஸ்’.

ஷாஜி கைலாஸ் இயக்கும் இந்தப் படத்தில் இனியா, சுஜா வாருணி, கோமல் சர்மா, நாசர், எம்.எஸ்.பாஸ்கர் உட்பட பலர் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தில் இடம் பெறும் ஒரு சேசிங் காட்சிக்காக அமெரிக்கா சென்று பயிற்சி பெற்று திரும்பி வந்துள்ளார் ஆர்.கே. அது பற்றி அவர் கூறுகையில்,

“இந்தப் படத்தில் சேசிங் காட்சி ஒன்று இடம் பெறுகிறது . இதை ஹாலிவுட் தரத்தில் எடுக்க திட்டமிட்டோம். அப்படிப் பண்ண வேண்டுமென்றால், இந்தந்த பயிற்சிகள் தேவை என்று கனல் கண்ணன் மாஸ்டர் சொன்னார். அவர் சொன்னதை அடுத்து அமெரிக்காவில் நியூயார்க் அருகில் க்ரீன்பாயிண்ட், ப்ருக்லீன் என்ற இடத்தில் இருக்கும் ஹாலிவுட் ஸ்டன்ட் புரொபஷனல் மையத்துக்கு சென்றேன். அங்கு பாப் கார்ட்டர் என்பவரிடம் சேசிங் காட்சிக்காகச் சிறப்புப் பயிற்சி எடுத்தேன்.

15 நாட்கள் நடந்த இந்த பயிற்சியில் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். அது மட்டுமல்லாமல் அந்த சேசிங் காட்சிக்கான பாதுகாப்பு உபகரணங்களையும் வாங்கி வந்தேன். படத்தின் ஹைலைட்டான விஷயங்களில் இந்த சேசிங் காட்சியும் ஒன்றாக இருக்கும். விரைவில் அந்த காட்சிப் படமாக்கப்பட இருக்கிறது. அத்துடன் படத்தின் ஷுட்டிங்கும் முடிவடைகிறது,” என்றார் ஆர்.கே.

Read Previous

Baahubali – Tamil – Juke Box

Read Next

Atlee- Vijay film to kick off tomorrow…