சீமராஜா – போட்டி போட்டு உழைத்தோம் – பாலசுப்பிரமணியம்

‘சீமராஜா’ படத்தின் இரண்டு பாடல் வீடியோக்கள் வெளிவந்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதில் உள்ள காட்சிகளின் தெளிவும், அழகும் படத்தின் ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியத்தின் பணியையும் சேர்த்து பாராட்ட வைக்கிறது.

இப்படத்தில் பணியாற்றிய அனுபவம் பற்றி பாலசுப்பிரமணியம் கூறுகையில்,

“எனது முந்தைய படங்களை விட இந்தப் படம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என நிறைய மெனக்கெட்டேன். பொன்ராம் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில், இமான் இசையில், என இந்த கூட்டணியில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன்’ ஆகிய படங்கள் கிராமிய பின்னணியில் உருவான படங்கள் என்பதால் இந்த வித்தியாசம் தேவைப்பட்டது. அதே பிண்ணனி என்றாலும், காட்சி அமைப்பு மிக மிக வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று உழைத்தோம்.

இயக்குநர் பொன்ராம், கலை இயக்குனர் முத்துராஜ், என ஒவ்வொருவரும் போட்டி போட்டு உழைத்தோம். இந்த படத்தில் உள்ள நடிகர்கள் தங்களது அனுபவத்தின் அடிப்படையில் ஒளி அமைப்புக்கு ஏற்றவாறு ஒத்துழைப்பு தந்தனர்.

சிவகார்திகேயன், சமந்தா, சூரி , சிம்ரன், நெப்போலியன் சார், லால் சார் என குவிந்திருந்த நட்சத்திரங்கள் படத்துக்கு பெரிய அந்தஸ்தைத் பெற்றுத் தந்திருக்கிறது.

படத்தை குறிப்பிட்ட காலத்தில், சிறந்த தரத்தில் வழங்க வேண்டும் என்பதால் மிகுந்த உடல் களைப்பு மட்டுமின்றி, மனக்களைப்பு கூட இருந்தது. ஆனால் சிவகார்த்திகேயன் மற்றும் சூரியின் இடைவிடாத உற்சாகம் எங்களுக்கு உத்வேகத்தையும், உற்சாகத்தையும் தந்தது. ‘சீமராஜா’ எங்கள் உழைப்புக்கு பெரும் அந்தஸ்தைப் பெற்று தரும்,” என்கிறார் பாலசுப்பிரமணியம்.

24 ஏஎம் ஸ்டுடியோஸ் ஆர்.டி.ராஜா தயாரிப்பில், பொன்ராம் இயக்கத்தில், இமான் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி, நெப்போலியன், சிம்ரன், லால் மற்றும் பலர் நடிக்கும் படம் சீமராஜா.

வினாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளை மறுநாள் செப்டம்பர் 13ம் தேதி இப்படம் வெளியாகிறது.

Read Previous

சீமராஜா சண்டைக் காட்சிகள் சவாலானது – அனல் அரசு

Read Next

சீமராஜா – இசையில் இனிமை சேர்த்த இமான்

Most Popular