90களின் இறுதியிலும் 2000ன் ஆரம்பத்திலும் தனது நடிப்பு, நடனம் மூலம் தமிழ்த் திரையுலகத்தில் நம்பர் 1 இடத்தில் இருந்தவர் சிம்ரன்.
‘சீமராஜா’ படத்தில் வில்லித்தனமான கதாபாத்திரத்தில் அதிரடி நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறாராம்.
பட அனுபவம் பற்றி அவர் கூறுகையில்,
“சீமராஜா படத்தில் ஒரு எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் பொன்ராம் சார் என்னை அணுகிய போது எனக்கும் அந்த மனநிலைதான் இருந்தது. நான் அந்த வாய்ப்பை ஏற்றுக் கொள்ள உண்மையிலேயே தயங்கினேன். ஆனால் கதையை என்னிடம் சொல்ல எனக்காக பொன்ராம் சார் பொறுமையாக காத்திருந்ததால்தான் இது நடந்தது. ஒருமுறை, நான் கதையைக் கேட்ட பிறகு, என் கதாபாத்திரம் எப்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் பார்த்த பிறகு இந்த படத்தில் நடிக்கும் தீர்மானத்துக்கு வந்தேன்.
இந்த படத்தில் எனக்கு நல்ல உள்ளங்களுடன் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. ஒட்டு மொத்த படக்குழுவினரும் ஒரு குடும்பமாக மிகவும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்தனர். கடந்த பல ஆண்டுகளில் பல படங்களில் பணிபுரிந்திருந்தாலும், இந்தக் குழுவில் முழுக்க நேர்மறை அதிர்வுகளை உணர்ந்தேன்.
குறிப்பாக, சிவா, பொன்ராம் கூட்டணி ஏற்கனவே வெற்றிகரமான படங்களைக் கொடுத்துள்ளது, ரசிகர்கள் எந்த கேள்வியும் இல்லாமல் இந்த படத்தை பார்க்க வருவார்கள். ஆனால் சிவகார்த்திகேயன், பொன்ராம் மற்றும் குழுவில் உள்ள அனைவருமே ரசிகர்களுக்கு முந்தைய படங்களை விடவும் சிறப்பான படத்தைக் கொடுப்பதில் மிகுந்த அக்கறை காட்டினார்கள்,” என்கிறார்.