சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் ‘ரஜினி முருகன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்தப் படத்தையடுத்து சிவகார்த்திகேயன் சொந்தப் படத்தில் நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால், சிவகார்த்திகேயன் சொந்த நிறுவனமெல்லாம் ஆரம்பிக்கவில்லையாம். சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பரான ஆர்.டி.ராஜா தான் படத்தைத் தயாரிக்கப் போகிறார். அதில் சிவா நாயகனாக மட்டுமே நடிக்க உள்ளார்.
நேற்று டிவிட்டரில் ‘sivas next’ என்ற கணக்கு ஒன்று ஆரம்பிக்கப்பட்டு அதில் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு ஜுலை 1ம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என தெரிவித்துள்ளார்கள்.
இந்தத் தயாரிப்பு நிறுவனம் பற்றியும் படத்தின் மற்ற தகவல்களும் அன்று வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறுகிய காலத்திலேயே தனது திறமையால் முன்னணி நடிகராக உயர்ந்துள்ள சிவகார்த்திகேயனின் அடுத்த படத்துடன் கை கோர்த்துக் கொள்ள பல முன்னணி நிறுவனங்கள் போட்டி போடுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.