‘இது நம்ம ஆளு’ – ரிலீஸுக்கு ரெடி…

சிம்பு, நயன்தாரா மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்க ஏறக்குறைய இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட படம் ‘இது நம்ம ஆளு’.

பாண்டிராஜ் இயக்கத்தில் பரபரப்பாக ஆரம்பமாகி நடந்த இந்தப் படம் ஒரு கட்டத்தில் அப்படியே நின்று போனது. அதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டது.

அதன் பின் ஒரு வழியாக படத்தை எப்படியோ எடுத்து முடித்து விட்டார் பாண்டிராஜ். நேற்று இந்தப் படம் பற்றிய அப்டேட் ஒன்றை செய்திருக்கிறார்.

“இது நம்ம ஆளு’ முடிந்து விட்டது, டிரைலரும் ரெடி. 2 பாடல்கள் இல்லாமல் படத்தின் நீளம் 131 நிமிடங்கள். இசை வெளியீடு, பட வெளியீடு எப்போது என்பதை தயாரிப்பாளர் அறிவிப்பார்,” என்று சொல்லியிருக்கிறார்.

இன்னும் எடுக்கப்படாமல் இருக்கும் அந்த இரண்டு பாடல்களை படமாக்குவார்களா, அல்லது அது இல்லாமலேயே படம் வெளிவருமா என்பது தெரியவில்லை.

எப்படியும் படத்தை ‘வாலு’ படத்திற்குப் பிறகு வெளியிட்டு விடுவார்கள் என்றே தெரிகிறது.

Read Previous

Kamal speak ahead of Papanasam release

Read Next

Urumeen – Official Trailer

Most Popular