சமந்தாவைப் பார்த்து பொறாமைப்படும் மாமா நாகார்ஜுனா

வினாயகர் சதுர்த்தி தினமான நாளை தமிழில் ‘சீமராஜா, யு டர்ன்’ ஆகிய இரண்டு படங்கள் வெளியாக உள்ளன.

இந்த இரண்டு படங்களிலும் சமந்தா தான் கதாநாயகி. அது மட்டுமல்லாது ‘யு டர்ன்’ படம் தெலுங்கிலும் வெளியாவதால் பட எண்ணிக்கையில் நாளை சமந்தாவின் 3 படங்கள் வெளியாகின்றன.

வேறு எந்த நாயகிக்கும் இப்படி ஒரு சிறப்பு கிடைத்திருக்க வாய்ப்பில்லை. மேலும், சமந்தாவின் கணவரான நாக சைதன்யா நடித்துள்ள ‘ஷைலஜா ரெட்டி அல்லுடு’ தெலுங்குப் படமும் நாளை வெளியாகிறது. அதனால், கணவருக்கும், மனைவிக்கும் இடையிலும் போட்டி உள்ளது.

சமந்தாவின் மூன்று படங்கள் ஒரே நாளில் வெளியாவதால் அவருடைய மாமனாரும், நடிகருமான நாகார்ஜுனா லேசான பொறாமையுடன் ஜாலியாக “கின்னஸ் சாதனை ஏதும் படைக்கப் போகிறாயா சமந்தா” என, இன்று ஹைதராபாத்தில் நடந்த யு டர்ன் நிகழ்ச்சியில் கேட்டுள்ளார்.

சமந்தாவின் மூன்று படங்களும் உலகம் முழுவதும் 1000 தியேட்டர்களுக்கு மேல் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Read Previous

சீமராஜா, முழுமையான பொழுதுபோக்குப் படம் – சிவகார்த்திகேயன்

Read Next

ரஜினிகாந்த் நடிக்கும் ‘2.0’ டீசர்