‘பாகுபலி’ படத்திற்கு வாழ்த்தையும், பாராட்டையும் தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள படத்தின் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி திரையுலகப் பிரபலங்கள் அனைவருக்கும் டிவிட்டரில் தற்போது நன்றி தெரிவித்து வருகிறார்.
இயக்குனர் ஷங்கர் முதல் தனுஷ், சிவகார்த்திகேயன், சந்தானம், என அவருடைய ‘டைம் லைன்’-ல் யார் யாரெல்லாம் வாழ்த்து சொன்னார்களோ அத்தனை பிரபலங்களுக்கும் நன்றியையும், அவர்களது பாராட்டுக்களுக்கு பதிலும் தெரிவிக்கிறார்.
நடிகை குஷ்புவுக்கு நன்றி தெரிவித்த ராஜமௌலிக்கு பதிலுக்கு குஷ்பு, ‘இரண்டாம் பாகத்திற்காக காத்திருக்க முடியவில்லை’ என்று கூறியிருந்தார்.
அதற்கு பதிலளித்த ராஜமௌலி, “நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை, ஒரு வருடத்திற்குள்ளாக இரண்டாம் பாகத்துடன் வந்து விடுவோம்,” என்று கூறியுள்ளார்.