‘வாலு’ தடை, சிம்பு ரசிகர் தற்கொலை முயற்சி ?

‘வாலு’ படத்தை வெளியிட நீதிமன்றம் தடையை நீட்டித்ததைத் தொடர்ந்து ஜுலை 17ம் தேதி வெளிவருவதாக இருந்த படம் தற்போது தள்ளிப் போயுள்ளது.

இதனிடையே படம் வெளிவராத காரணத்தால் சிம்பு ரசிகர் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தாக தகவல் வெளியாகியுள்ளது.

அதைப் பற்றி சிம்புவே அவருடைய டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

“ரசிகர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்தார் என்று கேள்விப்பட்டதும் என்னுடைய இதயமே நொறுங்கிப் போனது. நான் இப்போது அழுது கொண்டிருக்கிறேன். ரசிகர்களே, தயவு செய்து தைரியமாக இருங்கள். உங்களை விழ வைத்து விடமாட்டேன்.

நான் ஏற்கெனவே உடைந்து போயிருக்கிறேன், தைரியமாக இருக்க முயன்று வருகிறேன். இந்த நேரத்தில் இது மாதிரியெல்லாம் செய்யாதீர்கள். உங்கள் அன்பை விட எனக்கு வேறொன்றும் பெரிதல்ல,” என சிம்பு அவருடைய டிவிட்டரில் சிறிது நேரத்திற்கு முன் பதிவிட்டுள்ளார்.

Read Previous

Andhra Mess – Official Theatrical Trailer

Read Next

Paayum Puli – Silukku Marame…. – Making Video