ஃபேஸ்புக்கை வைத்து ஒரு படம்…

‘எஃப்.பி.ல ஸ்டேட்டஸ் போடு சாட் பண்ணு’ என்று ஒரு படத்திற்கு பெயர் வைத்திருக்கிறார்கள்.

ஆங்கிலத்தில் தலைப்பு இருப்பதால் எப்படியும் படம் வெளிவரும் போது தலைப்பு மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஆனாலும், இன்றைய காலத்தில் இளைஞர்களும், இளைஞிகளும் அதிகம் பயன்படுத்தும் ஒரு விஷயத்தை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் செந்தில்நாதன். இதற்கு முன் பரபரப்பான பேய்ப் படமான ‘சிபி’ படத்தை இயக்கியவர்.

“நாகரிகம் வளர்வதற்கு ஏற்றபடி அறிவியல் சார்ந்த வளர்ச்சியும் அதிமாகிக் கொண்டேதான் போகிறது. அவையிரண்டும் சேர்ந்து வளரும் போது பிரச்சனைகளும் சேர்ந்துதான் வளர்கிறது.

இன்றைய சூழ்நிலையில் ஃபேஸ்புக் எவ்வளவுக்கெவ்வளவு ஹீரோவாக இருக்கிறதோ அதே அளவிற்கு வில்லனாகவும் இருக்கிறது.

ஒருவர் உண்மையான ஸ்டேட்டஸை போடாததால் ஏற்படும் விளைவுகள்தான் இந்தப் படம். அதைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களை விறுவிறுப்பாகச் சொல்லியிருக்கிறோம்,” என்கிறார் இயக்குனர்.

எஸ்எஸ்விஎஸ் எஸ்எஸ்கே புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் ரகுமான், ஷுரேஸ் சர்மா, அதிதி ஆச்சார்யா, ஸ்ருதி மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

இந்தக் காலத்திற்குத் தேவையானதொரு படம்தான். எத்தனை பேர் பொய்யான புரொபைல்களையும், நடிக, நடிகைகளின் புகைப்படங்களையும் பயன்படுத்தி வருகிறார்கள்.

எப்படியும் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துபவர்கள் இந்தப் படத்தைக் கண்டிப்பாகப் பார்த்து சாட் பண்ணுவார்கள்.

Read Previous

Aaranyam – Official Trailer

Read Next

ஆவி குமார் – விமர்சனம்

Most Popular