‘போக்கிரி மன்னன்’ – நாயகனாக உயர்ந்த நடன இயக்குனர் ஸ்ரீதர்

‘காதலில் விழுந்தேன்’ படத்தில் இடம் பெற்ற ‘நாக்க முக்க…’ பாடல் மூலம் பிரபலமடைந்த நடன இயக்குனர் ஸ்ரீதர் தொடர்ந்து “ஜில்லா, தூப்பாக்கி, தலைவா, எங்கேயும் காதல், வெடி, ஹாலிடே (ஹிந்தி), ராஜ்குமார் (ஹிந்தி), பைசா (தெலுங்கு) மற்றும் விரைவில் வரவிருக்கும் ‘புலி’ படம் உட்பட பல படங்களில் நடன இயக்குனராகப் பணி புரிந்துள்ளார்.

தற்போது RSSS பிக்சர்ஸ் சார்பாக தணிகைவேல் வழங்க, ஸ்ரீ பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் ரெட்டி தயாரிப்பில் ராகவ் மாதேஷ் இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் படத்தில் ‘போக்கிரி மன்னன்’ படத்தின் மூலம் நாயகனாக உயர்ந்துள்ளார்.

விஜய் நடித்த ‘போக்கிரி’, ரஜினிகாந்த் நடித்த ‘மன்னன்’ ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களின் டைட்டிலில் என் படத்தின் டைட்டில் அமைந்திருப்பதைப் பெருமையாக நினைக்கிறேன். சிறு வயதிலிருந்தே கலைத் துறையில் இருந்து வருகிறேன்.

என்னுடைய அப்பா ஒரு நாடக நடிகர், அவருடன் நாடகங்களுக்குச் செல்லும் போது அப்படியே மேடை ஏற ஆரம்பித்தேன். அதன் பின் நடனக் குழுவில் நடன நடிகராக இருந்து பல படங்களில் நடனமாடி இன்று முன்னணி நடன இயக்குனராக இருந்து வருகிறேன்.

நான் நடன நடிகராக இருந்த போது ரஜினி சாருடன், ‘மாத்தாடு மாத்தாடு மல்லிகே…’ பாடலுக்கு அவருக்குப் பக்கத்தில் நடனமாடிக் கொண்டிருந்தேன். அப்போது அவர் கை என் மீது வேகமாகப்பட்டு விட்டது. அதற்கு அவர் என்னிடம் ‘சாரி’ என சொல்வார் என்று எதிர்பார்த்தேன், ஆனால், என்ன நினைத்தாரோ, அப்படியே கண்களை மூடி என் தலை மீது கை வைத்து, ‘நீ நல்லா வருவே’ என்று என்னை ஆசீர்வாதம் செய்தார். அது என்னை மிகவும் நெகிழ வைத்தது.

இந்த ‘போக்கிரி மன்னன்’ குடிப் பழக்கத்தின் தீமைகளை எடுத்துச் சொல்லும் ஒரு அருமையான படம். அதற்காக புத்தியெல்லாம் சொல்லாமல் ஒரு அற்புதமான விஷயத்தை அனைவரும் ரசிக்கும்படியான ஒரு படமாகக் கொடுத்துள்ளோம்,” என்கிறார் ஸ்ரீதர்.

விரைவில் இந்தப் படம் வெளியாக உள்ளது.

Read Previous

Vasuvum Saravananum Onna Padichavanga – Official Trailer

Read Next

Kurangu Kaila Poo Malai – Audio Jukebox

Most Popular