பியானோ பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக ரேகா மிகப் பிரமாண்டமான முறையில் தயாரித்துள்ள படம் ‘திகார்’.
இந்தப் படத்தில் பார்த்திபன் தாதாவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரியங்கா நடிக்கிறார். இளம் நாயகனாக உன்னி முகுந்தன் நடிக்கிறார். கதாநாயகியாக அகன்ஷா பூரி நடிக்கிறார். மற்றும் எம்.எஸ்.பாஸ்கர், தேவன், ரியாஸ்கான், மனோஜ் கே.ஜெயன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
“நம்பர் ஒன் தாதாவின் வாழ்கையை இந்தப் படத்தில் பதிவு செய்து உள்ளோம். பார்த்திபன் படு பயங்கர தாதாவாக நடிக்கிறார். அந்த கதாபாத்திரம் வலுவுள்ளதாக இருந்ததால் இப்படிப் பட்ட கதாப்பாத்திரத்தில் நடித்தேன் என்று பெருமையாக அவரே சொல்லி இருக்கிறார்.
சென்னை, கேரளா, துபாய், போன்ற இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை அதிக பொருட் செலவில் உருவாக்கியுள்ளோம். இதற்கு முன் வெளியான எந்த படத்திலும் இந்த அளவிற்கு சண்டைக் காட்சிகள் இருந்ததில்லை என்கிற அளவுக்கு ஸ்டன்ட் காட்சிகள் இருக்கும். இம்மாதம் 21ம் தேதி படம் வெளிவருகிறது,” என படத்தின் இயக்குனர் பேரரசு தெரிவித்துள்ளார்.