தென்னிந்தியத் திரையுலகில் படத்திற்காக தன் தோற்றத்தை மாற்றிக் கொள்ளும் அளவிற்கு இதுவரை எந்த நடிகையாவது துணிந்திருப்பாரா என்பது சந்தேகம்தான்.
கமல்ஹாசன், விக்ரம் போன்ற சில நடிகர்கள் மட்டுமே நடிப்புக்காக தங்களது உடலை வருத்திக் கொண்டு நடிப்பவர்களாக இருக்கிறார்கள்.
முதல் முறையாக ஒரு நடிகை தன் அழகிய தோற்றத்தை மிகவும் குண்டாக மாற்றிக் கொண்டு நடிக்கிறார் என்றால் அதைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அப்படிப்பட்ட நடிகையாக மாறியிருப்பவர் அனுஷ்கா.
தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் குண்டானப் பெண்ணாக நடிப்பதற்காக அளவுக்கதிமாகச் சாப்பிட்டுத் தன் தோற்றத்தை அந்த அளவிற்கு மாற்றியிருக்கிறார்.
இன்று அந்தப் படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது. அழகை மட்டுமே தங்களது மூலதனமாக நினைக்கும் சிலர் மத்தியில் அனுஷ்காவின் இந்த மாற்றம் நிச்சயம் அசத்தலான ஒன்றுதான்.
அக்டோபர் 2ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.