இன்று 20ம் தேதி பிறந்த முதல் நிமிடத்தில் வெளியான ‘புலி’ படத்தின் டிரைலர் பல புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது.
யு டியூபில் டிரைலர் வெளியான 19 மணி நேரத்தில் 10 லட்சம் ஹிட்ஸ்களைக் கடந்து ஒரு சாதனையையும், 54,000 லைக்குகள் வாங்கி மற்றொரு சாதனையைம் புரிந்திருக்கிறது.
இதற்கு முன் ‘என்னை அறிந்தால், ஐ’ படங்கள் 24 மணி நேரத்தில் 10 லட்சம் ஹிட்ஸ்களைப் பெற்று சாதனை படைத்திருந்தது. லைக்குகள் சாதனையிலும் அந்தப் படங்களை விட ‘புலி’ படத்தின் டிரைலர் முதல் நாளிலேயே 50,000 லைக்குகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
விஜய் நடித்த ‘கத்தி’ படத்தின் சாதனையையும் ‘புலி’ பட டிரைலர் தாண்டி, விஜய் நடித்துள்ள படங்களிலும் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.
24 மணி நேரம் முடிய இன்னும் நான்கு மணி நேரம் உள்ள நிலையில் அந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக வாய்ப்புள்ளது.